சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை நிறுத்தம்!!
சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இந்த மாதம் 22,23,24 தேதிகளில் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-17 14:20 GMT
ராணிப்பேட்டை சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இந்த மாதம் 22,23,24 தேதிகளில் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு வழக்கம் போல 25ஆம் தேதி ரோப்கார் சேவை பக்தர்களுக்காக இயக்கப்படும் கோவில் நிர்வாகம் தெரிவித்தனர். திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் 1305 படிகள் வழியாகச் சென்று யோக நரசிம்மரையும் அமிர்தவல்லி தாயாரையும் தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.