வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கிராம வேளாண்மை பணி அனுபவ திட்டப் பயிற்சி!!
வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு கிராம வேளாண்மை பணி அனுபவ திட்டப் பயிற்சி வழங்கப்பட்டது.;
ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில், வேளாண்மை பட்டபடிப்பு பயின்று வரும் 4–ம் ஆண்டு மாணவிகள் ஷர்மிளா, சாரதி, சத்திய பிரியா, ஜி. சைனப், சஞ்சனா, சந்தியா, சரண்யா, ஷர்மிளா, ஆகிய மாணவிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனம் (NGO) அலுவலர் தினேஷ் குமாரை சந்தித்து அந்த அமைப்பின் நிர்வாக கட்டமைப்பு நிதி ஆதாரங்கள் இலக்குகள் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம், சிறுவாக்கத்தில் அமைந்துள்ள ஸ்கந்தாலயா ஆசிரமம் சென்று பார்வையிட்டனர். அங்கு சஞ்சீவி குருவால் பாரம்பரிய கால்நடை இனப் பெருக்கம் மற்றும் கோழி வளர்ப்பு மேலாண்மை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. ஆசிரமத்தில் மொத்தம் 25 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அதில் காங்கேயம், காங்க்ரேஜ், ரெட் சிந்தி, சாஹிவால், தர்பாக்கர், ஒங்கோல் மற்றும் புங்கனூர் குட்டை போன்ற இனங்கள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆசிரமத்திற்கு மரக்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்பட்டனர். இந்த அனுபவம் சமூக சேவை மற்றும் வேளாண்மை சார்ந்த அறிவை மேம்படுத்தும் பயனுள்ள செயல்பாடாக அமைந்துள்ளது.