கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் பொங்கலூரில் களப்பயிற்சி
பொங்கலூரில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் களப்பயிற்சி;

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகள் பொங்கலூரில் தங்கி களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் உகாயனூர் ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு விதை அமிர்தம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் மற்றும் இனக்கவர்ச்சி பொறி பயன்பாடு பற்றியும் செயல்முறை விளக்கம் செய்து காட் டினார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.