சங்கரன்கோவில் அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உமையதலைவன்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து(52) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு பல நாட்களாக மூச்சுத் திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மாலையில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவேங்கடம் காவல் உதவி ஆய்வாளர் யோபுசம்பத்ராஜன் விரைந்து சென்று உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.