காவேரிப்பட்டிணம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.
காவேரிப்பட்டிணம் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள நரி மேடு அடுத்த ஆண்டிகான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (30). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் ஆனால் குணம் ஆவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீதேவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.