ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து.

ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து.;

Update: 2025-04-05 07:30 GMT
ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவர் மீது ஆம்னி வேன் மோதி விபத்து. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா,கூடலூர் மேற்கு, கருநெல்லி வலசு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மனைவி கண்ணம்மாள் வயது 55. இவர் நேற்று முன்தினம் மாலை 4:30 மணி அளவில், அரவக்குறிச்சி - ராஜபுரம் பிரிவு சாலையில் உள்ள ஆனந்தபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, கரூர், அரவக்குறிச்சி, ஜீவா நகரை சேர்ந்த ஜான்சன் வயது 52 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி வேன் கண்ணம்மாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக கண்ணம்மாள் அளித்த புகாரில் ஆம்னி வேனை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜான்சன் மீது வழக்கு பதிவு செய்தனர் சின்னதாராபுரம் போலீசார்.

Similar News