தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி!

தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி;

Update: 2025-04-05 14:02 GMT
தூத்துக்குடி; தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நியாயமாக செய்ய வேண்டும் தொகுதி மறுவரையறை தொடர்பாக ஒரு உறுதியை ஒன்றிய பாஜக அரசு இதுவரை தரவில்லை தொகுதி மறு வரையறைக்காக தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் இப்பவே மத்திய அரசு நம்மை கண்டும் காணாமல் உள்ளது நமது கொள்கைகளையும் கோரிக்கைகளையும் எடுத்துரைப்பது சவால் ஆகிவிடும் நமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் மக்கள் அனைவரும் இதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் அநீதி இழைக்கப்படுகிறது மொழியில் நாம் கட்டாயப்படுத்த படுகிறோம். அதற்காக கல்விக்கான நிதி வழங்கவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்கப்படவில்லை. தமிழக மக்களுக்காக தமிழ் மொழிக்காக தமிழக முதல்வர் நல்லாட்சி புரிந்து வருகிறார் ஒன்றிய பாஜக அமைச்சர்கள் அமைதி காக்கின்றனர். ஒரு தெளிவான முடிவை இதுவரைக்கும் நமக்கு தெரிவிக்கவில்லை திருவண்ணாமலையில் சத்துணவில் முட்டை கேட்ட மாணவர் மீது தாக்குதல் நடத்திய சமையலர், சமையல் உதவியாளர் இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளோம். இளம் சிறார் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்

Similar News