புதிய வாக்குச்சாவடி அமைக்க ஆர்டிஓவிடம் பொதுமக்கள் மனு

முத்துக்கவுண்டம்பாளையத்தில் புதிய வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் ஆர்டிஓவிடம் பொதுமக்கள் மனு;

Update: 2025-04-05 15:34 GMT
குண்டடம் அருகேயுள்ள முத்துக்கவுண்டம்பாளையம், ஆத்திக்காட்டுபுதூர் ஆகிய 2 கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு 600-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நந்தவனம்பாளையம் சென்று வருகின்றனர். முறையான பஸ் வசதி இல்லாத நிலையில் முத்துக்கவுண்டம்பாளையத்திலிருந்து தும்பலப்பட்டி வரை நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்து நந்தவனம்பாளையம் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். அதிக தூரம் மற்றும் முறையான பஸ்வசதி இல்லாத காரணத்தினால் முதியோர்கள், நோயாளிகள் வாக்களிக்க செல்ல முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இந்த நிலையில் நேற்று முத்துக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் ஆர்.டி.ஓ.வை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், முத்துக்கவுண்டம்பாளையம் மற்றும் ஆத்திக்காட்டுபுதூரில் 602 வாக்காளர்கள் உள்ளோம். 5 கிலோ மீட்டர் தூரம் சென்று காத்திருந்து வாக்களிக்க சிரமமாக உள்ளது. எனவே சிரமமின்றி வாக்களிக்க வசதியாக முத்துக்கவுண்டம்பாளையம் அரசு நடு நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைத்துத்தர வேண்டுகிறோம், என குறிப்பிட்டுள்ளனர்.

Similar News