ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

தாராபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா;

Update: 2025-04-05 15:37 GMT
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னாக்கல்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். எஸ்.எம்.சி. தலைவி சித்ரா முன்னிலை வகித்தார். எஸ்.எம்.சி. உறுப்பினர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு ரசித்தனர்.

Similar News