கோத்தகிரி வந்தடைந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
முதலமைச்சர் வருகை காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு;
நாளை உதகையில் நடக்கவிருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கோத்தகிரி வந்தடைந்தார் 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீலகிரி மாவட்டம் உதகையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பணி தற்போது நிறைவடைந்த நிலையில் அதனை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று கோத்தகிரி வழியாக உதகை செல்லவிருக்கிறார். சரியாக நான்கு முப்பது மணி அளவில் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து கோத்தகிரி சாலை மார்க்கமாக வந்த மு க ஸ்டாலின் அவர்களுக்கு காமராஜர் சதுக்கம் பகுதியில் அவரது கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர். முக ஸ்டாலின் அவர்கள் மழையில் பொதுமக்களை நடந்து வந்து சந்தித்த சம்பவம் கட்சி தொண்டர்களை உற்சாக கடலில் மூழ்கடித்தது அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு உதகைக்கு புறப்பட்டு சென்றார்.