லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்;
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் காங்கேயம் சாலையில் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எல்.கே.சி. நகரில் தனது வீட்டுக்கு அருகில் 3-ம் நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த தண்டபாணி மகன் இளங்கோ (வயது 53) என்பரை கைது செய்தார்.