மருதூர் காட்டாதூர் அரசு பள்ளிகளில் நூற்றாண்டு விழா அமைச்சர் எம் பி பங்கேற்பு

மருதூர் காட்டாதூர் அரசு பள்ளிகளில் நூற்றாண்டு விழா நடைபெற்றது போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.;

Update: 2025-04-06 03:49 GMT
அரியலூர், ஏப்.5- அரியலூர் மாவட்டம் மருதூர் மற்றும் காட்டாத்தூர் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது இதில் காட்டாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் விழாவில் நம் பள்ளி நம் பெருமை என ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் விழாவில் பள்ளியின் சார்பில் முன்னாள் மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன இவ்விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலகட்டத்திலேயே இந்த கிராமத்தில் இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டு இப்பள்ளியில் கல்வி பயின்றவர்கள் பலர் சமுதாயத்தில் உயர்ந்து நிற்கின்றனர் நான் இந்தப் பள்ளியில் படித்த போது என்னுடன் படித்த மாணவர்கள் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது நான் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆண்டிமடம் தொகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன குறிப்பாக தொடக்கப் பள்ளியாக இருந்த 42 பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டன பல்வேறு பள்ளிகளில் இருந்த ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதை நினைவு கூறுகிறேன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி மூன்று இடத்தில் இருந்த அரியலூர் மாவட்டம் இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சிக்குரியது இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஆசிரியர்கள் தங்களது பணியினை சிறப்பாக ஆற்ற வேண்டும், கல்விதான் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டம் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 27 சதவீதமாக இருந்தபோது தமிழ்நாட்டில் 52 சதவீதத்தினர் உயர் கல்வி படிப்பவர்களாக இருந்தனர் தமிழ்நாடு முதலமைச்சரின் புதுமைப்பெண் மற்றும் நான் முதல்வன் திட்டங்களினால் தற்போது 82 சதவீத மகளிர் உயர்கல்வி படிப்பவர்களாக உள்ளனர் இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 100 சதவீதம் மாணவர்கள் கல்லூரி படிக்கின்ற சூழல் ஏற்படும் எனவே நமது பிள்ளைகளுக்கு எக்காரணத்தை கொண்டும் கல்வியை நிறுத்தாமல் அவர்கள் கல்வி கற்க வைக்க வேண்டும் கூறினார்

Similar News