சக தோழமையுடன் பழக வைத்து கல்வி அளித்து வாழ வைப்போம் விளந்தையில் புற உலக சிந்தனையாளர் ஆட்டிசம் தின விழா பேச்சு
நரகத் தோழமையுடன் பழக வைத்து கல்வி அளித்து வாழவைப்போம் விலங்கையில் புற உலக சிந்தனையாளர் ஆட்டிசம் புற உலக சிந்தனையாளர் தின விழா நடைபெற்றது.;
அரியலூர் ஏப்.6- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆண்டிமடம் வட்டார வள மையத்திற்குட்பட்ட விளந்தை கிழக்கு நடுநிலைப்பள்ளி ஆயத்தப்பயிற்சி மையத்தில் புற உலக சிந்தனையாளர் (ஆட்டிசம்) தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிறகு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அருமைராஜ் தலைமை வகித்தார்.. ஆசிரியர்பயிற்றுநர்கள் சத்தியபாமா, அகிலா முன்னிலை வகித்தனர்.பள்ளி மேலாண்மை குழு கணக்காளர்கள், கணினி விவரப் பதிவாளர், மாற்றுத்திறன் மாணவர்கள், மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். மேற்பார்வையாளர் அருமைராஜ் பேசுகையில் ஆட்டிசம் பாதித்த மாணவர்களை இளம் பருவத்தில் கண்டறிவது, அவர்களுக்கு பயிற்சி அளிப்பது அவர்களையும சக வயதுடையோர்களிடம் சக தோழமையுடன் பழக வைத்து ஒருங்கிணைத்து கல்வி அளித்து வாழ வைப்பது பற்றி மேற்பார்வையாளர் எடுத்து கூறினார். சிறப்பு பயிற்றுநர்கள் மணிவண்ணன், டெல்பிடயானா, ஸ்ரீபிரியா ஆகியோர்கள் விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மாணவர்களுக்கு கேக்,தேனீர் வழங்கப்பட்டது. ஆயத்த மைய பராமரிப்பாளர் பவானி, ஆயத்த மைய பாதுகாவலர் ஜெயம் இருவரும் ஆயத்த மையத்தில் உள்ள மாணவர்களிடம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.சிறப்பு பயிற்றுநர் மணிவண்ணன் நன்றியுரை கூறினார்.