அரியலூர் வட்டாரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் வட்டாரத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.;

Update: 2025-04-06 04:00 GMT
அரியலூர் ஏப்.6- அரியலூர்  அரசு உதவிபெறும் ஸ்டெல்லா மேரி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு,திருச்சி  சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம்   இறுதியாண்டு வேளாண் புல மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவம் திட்டத்தில் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சதுரங்க போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா போன்ற போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி அசோகன் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தனர். பள்ளி மாணவர்களுக்கு வேளாண் மாணவர்கள் வேளாண்மையின் அவசியத்தையும் தேவையையும் எடுத்துரைத்து எதிர்கால படிப்பிற்கு அறிவுரை வழங்கினர், பின்பு ஊர் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பள்ளி மாணவர்களுடன் பேரணியாக சென்று மக்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணையானது பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். பேரணியின் போது விழிப்புணர்வு வாசகங்கள் அடைய பதாகை கையில் ஏந்தி கோஷமிட்டவாரு சென்றனர். பொதுமக்களிடம் போதை பொருள் ஒழிப்பு பற்றிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சென்றனர்.

Similar News