வத்திராயிருப்பு அருகே கன மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி ....*

வத்திராயிருப்பு அருகே கன மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி ....*;

Update: 2025-04-06 04:21 GMT
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கன மழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ...அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மூதாட்டி .... கடந்த 3 தினங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூமாபட்டி கான்சாபுரம் , மகாராஜபுரம் ,தம்பிபட்டி ,கோட்டையூர் அத்தி கோயில் ,பிளவக்கல் அணை , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் சுமார் கனமழை என்பது பெய்து வருகிறது. இந்த நிலையில் சுந்தரபாண்டியம் செம்பட்டி கிராமம் நெசவாளர் காலனி பகுதியில் லைலா என்ற 70 வது மூதாட்டி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார் . இரவில் திடீரென அவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமானது. உடனே மூதாட்டி வெளியில் சென்றதால் எந்த காயமின்றி அதிஷ்டவசமாக உயிர்தப்பினார். மாவட்ட நிர்வாகம் சேதம் என்ற வீட்டை சீரமைத்து தர வேண்டுமென அந்த மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News