நடு ரோட்டில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்.... அதிர்ஷ்டவசமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.. பொது மக்களின் உயிர் மீது விளையாடும் மின்சார வாரியம்..*
நடு ரோட்டில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்.... அதிர்ஷ்டவசமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.. பொது மக்களின் உயிர் மீது விளையாடும் மின்சார வாரியம்..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நடு ரோட்டில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்சார வயர்.... அதிர்ஷ்டவசமாக பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.. பொது மக்களின் உயிர் மீது விளையாடும் மின்சார வாரியம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சாலையை கடந்து சென்ற உயர் அழுத்த மீன் கம்பி நடுரோட்டில் அறுந்து விழுந்தது.ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் To வத்திராயிருப்பு சாலையில் அமைந்துள்ளது தனியார் பல்கலைக்கழகம். இப்ப பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.இதன் காரணமாக இச்சாலையானது எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில் இன்று காலை சாலையின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்கு கொண்டு செல்லப்பட்ட உயர் அழுத்த மின் கம்பியானது திடீரென அறுந்து நடுரோட்டில் விழுந்தது.மின் கம்பி அறுந்து விழுந்ததும் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.மேலும் மின் கம்பி அறுந்து விழும்போது எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின்கம்பி அறுந்து கிடந்ததால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சுதாரித்துக் கொண்டு சாலையை கடக்காமல் நின்றனர்.இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ்நாடு மின்சாரத் துறையினர் அப்பகுதி முழுவதையும் மின் விநியோயகத்தை தடை செய்து அறுது விழுந்த உயிர் அழுத்த மின் கம்பியை சரி செய்தனர்.மின்சாரத் துறையினர் உயர் மின் அழுத்த கம்பிகளை தொடர்ந்து கண்காணித்து பராமரிப்பு பணிகள் செய்ய வேண்டும், பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் மின்சார வாரியம் அலட்சியப் போக்கில் சேவைப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.