கரூரில்,பாஜக ஸ்தாபன தின விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

கரூரில்,பாஜக ஸ்தாபன தின விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.;

Update: 2025-04-06 07:17 GMT
கரூரில்,பாஜக ஸ்தாபன தின விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். இந்தியாவில் 1951 ஆம் ஆண்டு ஜன சங்கம் என்ற பெயரில் துவக்கப்பட்ட கட்சி, 1980 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் பாரதிய ஜனதா காட்சியாக இதே நாளில் உருவெடுத்தது. இன்று உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற பெயரை தக்க வைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஸ்தாபன தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி வைத்து, கட்சியின் முன்னாள் முக்கிய தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட செயலாளர் ஆர் வி எஸ் செல்வராஜ், மகளிர் அணி மாவட்ட தலைவி பிரியா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு ஸ்தாபன தின விழாவை சிறப்பித்தனர்.

Similar News