திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தா .பழூர் ஒன்றியத்தில் திமுக சார்பில் பல்வேறு ஊராட்சிகளை கண்ணீர் கூந்தல் திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2025-04-06 09:17 GMT
திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  • whatsapp icon
அரியலூர், ஏப்.6- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் 72 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, உதயநத்தம், கோடாலிகருப்பூர், சோழன்மாதேவி ஆகிய இடங்களில்,கோடைகால தண்ணீர் பந்தலை,ஒன்றிய செயலாளரும் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் திறந்து வைத்து,பொதுமக்களுக்கு நீர் மோர்,பழங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் இந்துமதி நடராஜன்,அ.இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர் தமிழ்ச்செல்வன், சி.கண்ணதாசன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இரா.சங்கர் த.சம்பந்தம், வெ.பாலசுப்ரமணியன்,அ.தங்கபிரகாசம், த.குணசீலன்,க.நளராசன்,நீல.மகாலிங்கம் மற்றும் கழக தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News