கரூரில்,ஒப்பந்த ஊழியர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி இழுத்துச் சென்று உயிரிழப்பு.

கரூரில்,ஒப்பந்த ஊழியர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி இழுத்துச் சென்று உயிரிழப்பு.;

Update: 2025-04-06 09:59 GMT
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் மீது அதிவேகமாக வந்த லாரி மோதி இழுத்துச் சென்று உயிரிழந்த சம்பவம் - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருபவர் சின்னசாமி (27). சுக்காலியூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது கரூர் - மதுரை பைபாஸ் சாலையை கடக்க இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதியதில், இருசக்கர நின்ற மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் சின்னுசாமி லாரியின் அடியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பரிதாபமாக பலியானார். கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த லாரியின் ஓட்டுனர் அஜாக்கிரதை காரணமாகவே, இந்த விபத்து நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News