காருடையாம்பாளையத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.

காருடையாம்பாளையத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.;

Update: 2025-04-06 11:22 GMT
காருடையாம்பாளையத்தில் டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காருடையாம்பாளையம் அருகே மலப்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து வயது 64. இவர் ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 4 மணி அளவில், கரூர் - கோவை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காருடையாம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது, அதே திசையில்,வேலூர் மாவட்டம், ராஜா ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோகன் வேகமாக ஓட்டி வந்த சரக்கு வாகனம், மாரிமுத்து ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்ததில் மாரிமுத்துவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மாரிமுத்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய அசோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Similar News