தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடியை கண்டித்து
நாகை வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்;
தமிழ்நாட்டிற்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து, நாகை வருமான வரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, கருப்பு கொடி முற்றுகை கண்டன ஆர்ப்பாட்டம், நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைபெற்றது. பின்னர், நாகை மீன்பிடி துறைமுத்திலிருந்து, படகு மூலம் ராமேஸ்வரம் சென்று மோடிக்கு கருப்பு கொடி காட்ட புறப்பட்ட மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா மற்றும் கட்சி நிர்வாகிகளை, நாகை நகர போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.அப்துல் காதர், நாகூர் எம்.என்.ரபீக், ஆர்.சரவணன், எஸ்.விஸ்வநாதன், மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறைத் தலைவர் ஜெ.கே.டி.ராஜ்குமார், வட்டாரத் தலைவர்கள் கீழையூர் என்.சிங்காரவேலு, திருமருகல் வடக்கு ப.ஜீவானந்தம், தெற்கு எஸ்.சுரேஷ்குமார், கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் எஸ்.லியோ, திட்டச்சேரி நகர தலைவர் எம்.நிஜாமுதீன், நாகூர் நகரத் தலைவர் எஸ்.சர்புதீன் மரைகாயர், மாவட்ட இலக்கிய பிரிவுத் தலைவர் தி.வேதரத்தினம், மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் எஸ்.நாசிர் அலி , மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் எம்.ஹாரூன் இஸ்மாயில், வர்த்தகர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ஏ.வினோத், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்.சி.ரவி, மாவட்டச் செயலாளர் எஸ்.முகமது அலி ஜின்னா, மாவட்டச் செயலாளர் ஏ.சித்ரா, மாவட்ட பொதுச் செயலாளர் இ.அஞ்சம்மாள், மாவட்ட காங்கிரஸ் டி.சி.யு. தலைவர் கே.மோகன்தாஸ், நாகை வடக்கு வட்டாரத் தலைவர் ஆர்.தமிழரசன் , கீழையூர் வட்டார காங்கிரட்டி துணைத் தலைவர் வீ.ஜி.பாலசுப்பிரமணியம், தலைஞாயிறு ஆய்மூர் கிராம கமிட்டி தலைவர் சுரேஷ், கிராம கமிட்டி கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எஸ்.பழனி, கீழ்வேளூர் முன்னாள் நகரத் தலைவர் கே.ராமதாஸ், நாகூர் நகர காங்கிரஸ் செயலாளர் சகாபுதீன், திட்டச்சேரி முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.முகம்மது ஈஷாக், காங்கிரஸ் எஸ்.சி. துறை மாவட்டச் செயலாளர் வீ.சந்திரன், நாகை நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கே.சந்தான மாரிமுத்து, சிக்கல் கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உபயத்துல்லா, சிக்கந்தர் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் முரளி, திராவிடர் கழக நாகை நகரத் தலைவர் கே.செந்தில்குமார் மற்றும் இந்தியா கூட்டணி கலந்து கொண்டனர்.