தேனி பகுதியை சேர்ந்தவர் வீரஜக்கம்மாள் (50). இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது நுரையீரல் குழாயில் ஏதோ ஒரு பொருள் சிக்கியிருப்பது தெரிந்தது. தொடர்ந்து ப்ரோன்கோ ஸ்கோப்பி மூலம் நுரையீரல் குழாயில் சிக்கியிருந்த கருப்பு நிறப் பொருளை எடுத்தனர். அது சப்போட்டா பழத்தின் விதை என பின்னர் தெரிந்தது.