மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (40). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் அவரை அவரது உறவினர்கள் ஆண்டிப்பட்டியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் சேர்த்துள்ளனர். இந்நிலையில் ஏப்.4 அன்று பாண்டியராஜன் உடல்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது. அவரது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரணை.