வார விடுமுறை மற்றும் தமிழக முதலமைச்சர் வருகையொட்டி உதகை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.... போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ...

முதலமைச்சர் வருகையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி ....;

Update: 2025-04-06 15:01 GMT
வார விடுமுறை மற்றும் தமிழக முதலமைச்சர் வருகையொட்டி உதகை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.... போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் ... முதலமைச்சர் வருகையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி .... இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டமாகும். மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை புரிகின்றனர். இந்நிலையில் இன்று உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். தமிழக முதலமைச்சரின் வருகையை ஒட்டி உதகையில் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வார விடுமுறையை ஒட்டி இன்று உதகைக்கு வருகை புரிந்த சுற்றுலா பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். குறிப்பாக கூடலூரில் இருந்து உதகைக்கு வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை பிங்கர் போஸ்ட், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலா தலங்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியது குறிப்பிடத்தக்கது.

Similar News