பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்முதலமைச்சர் மு க ஸ்டாலின்

புதிய பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்;

Update: 2025-04-06 15:09 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்  ... தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டம் உதகையில் 353 கோடி மதிபீட்டில் கட்டபட்ட அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.பின்னார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அதிநவீன MRI , CT ஸ்கேன்  வசதிகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவினை  பார்வையிட்டார் இம் மருத்துவமனையானது இந்தியாவில் சிம்லாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மலை பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையாகவு உதகை அரசு மருத்துவக் கல்லூரி என்பது தமிழ்நாட்டிற்கு பெருமையாகும். மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை  வசதிகள் கொண்ட மருத்துவமனையாகும், மருத்துவமனையில் பழங்குடியினர்கான 50 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன முன்னதாக மருத்துவர் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சருக்கு இருளர் பழங்குடியினரின் பாரம்பரிய இசையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற  விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். விழா மேடை வருவதற்க்கு முன்பாக விழா மேடைக்கு முன்பு மாற்று திரனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார் இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.மேலும் 102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் ,மாவட்ட ஆட்சித்தலைவர்,நாடாளுமன்ற,  சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Similar News