அரியலூரில் காங்கிரஸôர்  ஆர்ப்பாட்டம்

அரியலூரில் காங்கிரஸôர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-04-06 15:33 GMT
அரியலூர், ஏப்.6- :மத்திய அரசைக் கண்டித்து, அரியலூர் காமராஜர் சிலை முன் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் கட்டாய ஹிந்தி திணிப்பை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். புயல்வெள்ளம் உள்ளிட்டவற்றுக்கு போதிய நிதியை தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ராமேஸ்வரம் வருகையை கண்டித்தும் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார்.  நகரத் தலைவர் மு.சிவக்குமார்,  மாவட்ட துணைத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News