தன்னார்வலருக்கு அழைப்பு

நீர், மோர் பந்தல் அமைக்க தன்னார்வலர்களுக்கு அழைப்பு;

Update: 2025-04-07 02:43 GMT
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர், மோர் பந்தல் அமைக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வேலைக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால், தாகத்தைத் தணிக்க இளநீர், ஜூஸ், கம்பங்கூழ் போன்றவற்றை மக்கள் நாடி வருகின்றனர். மேலும், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட இடங்களில், மாநகராட்சி சார்பில் வாட்டர் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே, கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர், மோர் பந்தல் அமைக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் முன் வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Similar News