தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
தாராபுரத்தில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி;
தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட பயனாளிகளுக்கு மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்பு கண்ணன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பெண்கள் தொழில் முன்னேற்றத்திலும், பொருளாதாரத்திலும் முன்னேற வேண்டும் என்று கூறினார். பெண்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். திருப்பூர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி, சமுதாய அமைப்பாளர் நந்தினி, சியாமளா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.