ஒத்தையூர் பஸ் ஸ்டாப்- சாலையை நடந்து கடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து.
ஒத்தையூர் பஸ் ஸ்டாப்- சாலையை நடந்து கடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து.;
ஒத்தையூர் பஸ் ஸ்டாப்- சாலையை நடந்து கடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிபாளையம், அம்மன் நகர் ஐந்தாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி செல்வி வயது 55. இவர் ஏப்ரல் 4-ம் தேதி மாலை 6:30-மணி அளவில், பாளையம் -கரூர் சாலையில் உள்ள ஒத்தையூர் பஸ் ஸ்டாப் பகுதியில் நடந்து சென்றவர், அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கரூர், வெள்ளியணை, தெற்கு பள்ள சங்கனூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், நடந்து சென்ற செல்வி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக செல்வி அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வேலுசாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.