தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் மனு
மனு;

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படு எச்.அய்.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் ஆலோசகர்,ஆய்வகநுட்புனர்களாக 650 ஊழியர்ககள் 20 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர்.சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் படியும் எய்ட்ஸ் கட்டுபாட்டு பணியினை செய்து வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% +5% + 5% ஊதிய உயர்வு வழங்கிட ஆவன செய்திட வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை வழங்கினார்கள் மேலும் மாவட்டத் தலைவர் அந்தோணி பிரான்சிஸ்,மாவட்டச் செயலாளர் கண்ணன்,அய்யனார் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்