பூத்துக் குலுங்கும் மஞ்சக்காட்டு மலர்கள்... தேனெடுக்கும் தேனீக்களுக்கும் உற்சாகம்...

மஞ்சள் நிறத்தில் கடுகு பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. ..;

Update: 2025-04-07 15:16 GMT
பூத்துக் குலுங்கும் மஞ்சக்காட்டு மலர்கள்... தேனெடுக்கும் தேனீக்களுக்கும் உற்சாகம்... மஞ்சள் நிறத்தில் கடுகு பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. .............. இந்தியா முழுவதிலும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாட உணவு சமைப்பதில் தாளிப்பதற்காக கடுகு பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை. முன்பொரு காலத்தில் மலை மாவட்டங்களில் அதிக அளவில் கடுகு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் எந்தப் பராமரிப்பும் இன்றி ஓரிடத்தில் தூவி விட்டாலே தானாகவே முளைத்து வளரும் தன்மை கொண்டதாக இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால் சமீப காலங்களில் பணப் பயிர்களாக பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருவதால் இந்த கடுகு விளைச்சல் அறவே காணாமல் போய்விட்டது என்றே கூற வேண்டும். தற்பொழுது மஞ்சூர் பகுதியில் மஞ்சள் நிறத்தில் கடுகு பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. இந்த காலகட்டத்தில் கடுகு சாகுபடி சிறப்பாக உள்ளதால் இதனை எடுத்துச் சென்று சமையல் கடுகாகவும் அதிலிருந்து கடுகு எண்ணெய் எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய தலைமுறையினர் இந்த விவசாயத்தை அறவே மறந்து விட்டனர் என்பதை வயதானவர்களின் ஆதங்கமாக உள்ளது. ஒரு கிலோ கடுகு ரூபாய் 160 வரை விற்பனையாவதால் இதற்காக கடுகு சாகுபடி செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மஞ்சூர் பகுதிகளில் தற்பொழுது தோட்டங்களில் மஞ்சள் நிறத்தில் கடுகு பூக்கள் பூத்துக் குலுங்குகிறது. அந்த பூக்களில் தேனீக்கள் தேன் எடுக்க அலைமோதுகிறது. இயற்கையின் பிடியில் பல்வேறு தாவரங்களும் தரவ இனங்களும் விலங்கினங்களும் ஒன்றை ஒன்று நாடியே வாழ்ந்து வருகிறது. தேனீக்கள் இல்லை என்றால் மனித இனமே அழிந்து விடும் என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கும் நிலையில் இவ்வாறான கடுகு பூக்களில் தேனீக்கள் அலைமோதுவது காண்பதற்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் முன்னோர்கள் வாழ்க்கை முறைப்படி பயிர் செய்யப்பட்ட பல்வேறு பயிர் மற்றும் தானிய வகைகளை பயிரிட்டு உடல் ஆரோக்கியத்திலும் உடல் நலனிலும் முன்னுரிமை அளித்து ஆரோக்கியமாக வாழ வழி செய்ய வேண்டும் என தெரிவிக்கின்றனர் உள்ளூர் மக்கள் .

Similar News