மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2024-25-ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்.;

Update: 2025-04-07 18:34 GMT
மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
  • whatsapp icon
2024-25-ஆம் ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவிலான தகுதியான சிறந்த 10 சுய உதவிக்குழுக்கள் (SHG)/ 5 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் (VPRC) / 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் (PLF) /ஒரு வட்டார அளவிலான கூட்டமைப்பு (BLF) ஊரகப் பகுதிகளிலும், ஒரு நகர அளவிலான கூட்டமைப்பு (CLF), 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகள் (ALF) மற்றும் 10 சுய உதவிக்குழுக்கள் (SHG) நகர்ப்புற பகுதிகளிலும் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, 2024-25 ஆம் ஆண்டிற்கு மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் விவரம் வருமாறு:-  கூட்டங்களை முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.  சேமிப்புத் தொகையை திறம்பட பயன்படுத்திருக்க வேண்டும்.  வங்கி கடன் பெற்றிருக்க வேண்டும்.  குழு உறுப்பினா;கள் பொருளாதார மேம்பாடு பெற்றிருத்தல் வேண்டும்.  குழு உறுப்பினா;கள் வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாடு குறித்து பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்.  சமூக நல நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் பங்கேற்பு செய்திருத்தல் வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய கிராம பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுய உதவிக்குழுக்கள், நகர அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகள் தங்களது விண்ணப்பங்களை உரிய படிவங்களில் தயார் செய்து 15.04.2025 முதல் 30.04.2025-க்குள் அந்தந்த வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்திற்கும், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திண்டுக்கல் என்ற அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்திட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News