வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
அரசின் நலத்திட்டங்கள் குறித்து அவதூறு பரப்பி வரும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் முகத்திரையை கிழிக்க திமுக தகவல் தொழில்நுட்ப அணி சிறப்பாக பணியாற்ற வேண்டும் வெள்ளைமலைப்பட்டியில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி பேச்சு;

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் மேற்கு ஒன்றியம் எஸ்பாறைப்பட்டி மற்றும் வீரக்கல் ஊராட்சிகளைச் சேர்ந்த தி.மு.க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் வெள்ளைமாலைப்பட்டி தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பாறைப்பட்டி ராமன் தலைமை தாங்கினார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் காணிக்கைசாமி, துணைச் செயலாளர் கலாபச்சை, மாவட்ட தகவல்தொழில்நுட்ப துணை ஒருங்கிணைப்பாளர் பாறைப்பட்டி வாஞ்சிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளருமான கள்ளிப்பட்டி மணி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர்கள் வீரக்கல் தங்கவேல், பாறைப்பட்டி பாலாஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விகாங்கேயன், காணிக்கைசாமி, ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் யூஜின், பாறைப்பட்டி கிளைச் செயலாளர் மாயப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.