அரூரில் நான்கு லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் நான்கு லட்சத்திற்கு பருத்தி ஏலம்;

Update: 2025-04-08 01:59 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் தர்மபுரி மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான அரூர், மொரப்பூர், கம்பை நல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி , பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர் மேலும். நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 180-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை எடுத்து வந்தனர். இந்த வாரம் ஆர்.சி.எச்.ரகபருத்தி குவிண்டால் ரூ.6, 909 ரூபாய் முதல் ரூ.7, 415 ரூபாய் வரை ஏலம் போனது. நேற்றைய ஏலத்தில் பருத்தி ரூ. 4 லட்சத்துக்கு ஏலம் போனதாக செயலாளர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

Similar News