சாலையோர பள்ளஙகளை சீரமைக்க கோரிக்கை.
மதுரை அருகே சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.;

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தில் இருந்து கீழப்பட்டி வரை புதிதாக சுமார் 2 கோடி செலவில் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த ரோடு சுமார் 20 நாட்களுக்கு முன்புதான் போடப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய்க்காக சாலையில் தோன்றிய பள்ளங்களை சரிவர மூடாமல் விட்டுச் சென்றதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக மலையூர் கிராமப் பகுதியில் சாலைகளில் ஆளை விழுங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு சாலையில் செல்வோர் அடிக்கடி விபத்தில் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் குடும்பத்துடன் வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து செல்லும் ஆபத்தான நிலை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.