
தஞ்சை கரந்தை பூக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது65). இவர் 5-ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துபோது அந்த சிறுமியை கணேசன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தை இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய், உடனே இது குறித்து தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சந்திரா வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.