தஞ்சாவூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள்;

Update: 2025-04-08 03:41 GMT
தஞ்சாவூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
  • whatsapp icon
தஞ்சாவூரில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கள்கிழமை  நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 620 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம்  வழங்கினார்.  பேராவூரணி வட்டம் காலகம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ வீடு கட்ட நிதியுதவி கேட்டு விண்ணப்பித்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் சார்பில், பாபநாசம் வட்டத்தைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் சலவைப் பெட்டி வேண்டி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கிய மனுவின் அடிப்படையில் உடனடித் தீர்வாக சலவைப் பெட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சி.பவானி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப.கமலகண்ணன் மற்றும்  அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News