ராமநாதபுரம் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது

திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 89 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது பெற்றோர்கள் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்பு;

Update: 2025-04-08 04:03 GMT
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருப்பாலைக்குடி காந்தி நகர் கிராமத்தில் அமைந்துள்ளது இதற்கான 89 ஆம் ஆண்டு பள்ளி விழா பள்ளி வளாகப் பகுதியில் வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவிற்கு கிராமத் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இராஜு அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் ஆண்டறிக்கையை ஆசிரியர் அன்பின் அமலன் வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வி துணை இயக்குனர் முத்துசாமி இன்றைய கல்வி முறையையும் பள்ளி வளர்ச்சி மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் கல்வியின் வளர்ச்சி மேன்மை குறித்தும் நடைபெற்ற நிகழ்வுகளையும் எடுத்துரைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த அரசு தொடக்கப்பள்ளி என்று மிகப் பெருமையாக விருது பெற்றதையும் எடுத்துரைத்து பல்வேறு கல்வி அலுவலர் பாராட்டையும் பெற்றதை பற்றி எடுத்துரைத்தார். கவிக்குயில் கவிஞர் தமிழ் கனல் பள்ளியின் சிறப்பு பற்றி எடுத்துக் கூறினார். இவ்வாண்டு விழாவில் கோலாட்டம், குச்சியாட்டம், காவடியாட்டம்,கரகாட்டம் ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பெற்றோர்களை மிகவும் கவர்ந்தன. இந்நிகழ்வில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராதிகா பிரபு பேரூராட்சி தலைவர் கோடை இடி மௌசூரியா கேசர்கான் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் அரசு ஒப்பந்ததாரர் முத்துகிருஷ்ணன் வட்டார மேற்பார்வையாளர் சுரேந்திரன் ஆசிரியர் பயிற்சிநர் உலகநாதன் ஜலில் மற்றும் ஆசிரியர்கள் ஜெசிந்தா சார்லட், மரிய அருள் லதா, கோமதி, குமரவேல், பழனிவேல், ராஜசேகர்,சுரேஷ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராணி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாத்திமா கனி,ஜான்சிராணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இவ்வாண்டு விழா அனைவரின் உள்ளத்தை கவர்ந்தன.என அனைவரும் பாராட்டி சென்றனர்.

Similar News