ராமநாதபுரம் மாணவர்களுக்கு வாசிப்பு திறனாய்வு ஆய்வு நடைபெற்றது

மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாசிப்பு திறன் குறித்த ஆய்வு நடைபெற்றது;

Update: 2025-04-08 04:06 GMT
ராமநாதபுரம் மாணவர்களுக்கு வாசிப்பு  திறனாய்வு ஆய்வு நடைபெற்றது
  • whatsapp icon
ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், மண்டபம் வட்டார கல்வி அலுவலர் சூசை அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, என்மனங்கொண்டான் பள்ளியில் நேற்று 100 நாள் 100% சதவீதம் வாசிப்பு திறன் நிறைவு விழா வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் தௌஹீதா ராணி அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில் உச்சிப்புளி காவல்துறை சார்பு ஆய்வாளர் கலைமுருகன், என்மனங்கொண்டான் ஜமாத் தலைவர் அப்துல் ரசீது, சுகாதாரத்துறை சார்பாக செவிலியர் மகேஸ்வரி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அஹமது ரஸ்மீன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சதாம் உசேன், இல்லம் தேடிக் கல்வி சார்பாக பாண்டிமீனாள் ஆகியோர் கலந்து கொண்டனர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா அவர்கள் செயலியில் மாணவர்களின் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு கணித அடிப்படை திறனை ஆய்வு செய்தார். மாணவர்கள் மேற்கண்ட திறன்களில் பெருமளவு மேம்பட்டு இருப்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். ஆசிரியை வெங்கடேஸ்வரி நன்றி கூறினார்.

Similar News