ராமநாதபுரம் நீர் மோர் பந்தல் திறப்பு
முதுகுளத்தூர்அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்தி சிலை அருகே அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் கே.முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெயமுருகன், ராஜ்குமார், மாரிமுத்து, ராஜா, சுப்புலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.