சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் சென்னகேசவ பெருமாள் கோவில் ராம நவமி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2025-04-08 06:52 GMT
  • whatsapp icon
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவிஏ சமேத சென்னகேசவ பெருமாள் கோவில் ஸ்ரீ ராம நவமி திருவிழா கடந்த 29-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. மேலும் ஒவ்வொரு நாளும் சாமிக்கு ஒவ்வொரு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. அதன்படி சத்திய நாராயணன், மச்ச, கஜேந்திர மோட்சம்,, ஸ்ரீ சேஷ சயனம், வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம்,, பிருந்தாவனம், பார்த்தசாரதி ஆகிய அலங்கார சேவைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாமிக்கு நவமி அபிஷேகமும், ஸ்ரீ ராமர் அவதார அலங்கார சேவையும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மேளதாளங்கள் முழங்க வரிசை அழைப்பும், பின்னர் கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவமமும் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான இன்று காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னை கேசவ பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது. பெருமாளுக்கு புதியதாக வடிவமைக்கப்பட்ட தேரில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சாமிக்கு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனனை நடைபெற்றது. பின்னர் காலையில் பெண்கள் மட்டும் நிலை பெயர்த்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாலை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாவி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை (புதன்கிழமை) பல்லக்கு உற்சவமும், சயன உற்சவமும் நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், ராமநவபி விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

Similar News