ஒகேனக்கல் ஆற்றில் ஆபத்தான முறையில் பயணம்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பயணம்,மேம்பாலம் வேண்டி பொது மக்கள் கோரிக்கை;

Update: 2025-04-08 07:02 GMT
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தாலும் குறைந்து காணப்பட்டாலும் , ஊட்டமலையில் இருந்து ஆலம்பாடி கிராமத்திற்கு பரிசலில் சென்று, அங்கிருந்து மாதேஸ்வரன் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது வழக்கமாக உள்ளது இருப்பினும் ஒரே பரிசலில் அளவுக்கு அதிகமான நபர்களை பரிசலில் ஏற்றி செல்கின்றனர் மேலும் இரண்டு சக்கர வாகனங்களும் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறுக்கரைக்கு கொண்டு செல்லப்படுகிறது இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது எனவே இந்த ஆபத்தான முறையில் பயணத்தை கருத்தில் கொண்டு, இங்கே இரண்டு மாநில அரசும் சேர்ந்து ஒரு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News