முள்ளிப்புரம் டாஸ்மாக் பாரில் அடிதடி மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
காங்கேயம் அருகே அனுமதி இல்லாமல் நடைபெற்ற டாஸ்மாக் பாரில் அடிதடி - ஒருவர் காயம் ;

காங்கேயம் அடுத்துள்ள முள்ளிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 3890 இங்கு அனுமதி இன்றி பார் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேல் நத்தக்காடையூர் பகுதியை சேர்ந்த சேகர் (31) என்பவர் மதுபாட்டில் வாங்கியுள்ளார். அப்போது பாரில் இருந்த கண்ணன் மது பாட்டிலின் விலையை விட அதிக தொகை கேட்டுள்ளார் இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அனுமதி பெற்ற பார் இல்லையல்ல அப்படி இருக்கும் போது நீங்கள் எவ்வாறு இவ்வளவு அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யலாம் என சேகர் கேள்வி கேட்டதாக கூறப்படுகின்றது. இதில் ஆத்திரம் அடைந்த பார் ஊழியர்கள் கண்ணன் மற்றும் வெற்றி மணி ஆகியோர் சேகரை தாக்கியதாக கூறப்படுகின்றது.இதில் கீழே விழுந்த சேகருக்கு மண்டையில் வெட்டு காயம் மற்றும் கை,கால் ஆகிய பகுதிகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சேகரை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேகர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் இது குறித்து காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு மது அருந்தச் சென்றவரை தாக்கிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.