
மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக தமிழ் நாடு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கினர். முதல்வருக்கு சாதகமான தீர்ப்பாக பார்க்கப்படும் நிலையில் ஒசூர் திமுகவினர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.