ராமநாதபுரம் அரசு நியாய விலை கடை ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு சட்டை அணிந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தினகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது பொது விநியோகத் திட்டத்தில் தனித்துறையை உருவாக்கிடவும் உணவுப்பொருள் அனைத்தையும் பொட்டலமாக வழங்கிடவும் எடை தெராசுடன் பி ஓ எஸ் மிஷின் நினைப்பதை ரத்து செய்ய கோரியின் உட்பட முப்பது தீர்மானங்கள் நிறைவேற்ற கோரி முன்னெடுத்து மத்திய மாநில அரசு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர் மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றியை கூறினார்