சாலை விபத்தில் முதியவர் பலி
மதுரை திருமங்கலம் அருகே சாலை விபத்தில் முதியவர் பலியானார்.;

திண்டுக்கல் மாவட் டம் அருகே அணைப்பட்டி உள்ள சித்தானந்த ம் கிராமத்தைச் சேர்ந்த நேரு (75) என்பவருக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவ ருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் இவரது மனைவி தனலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் நேரு மதுரை திரு மங்கலம். உசிலம்பட்டி சாலையில் உள்ள சாத்தங்குடி கிராமத்தில் வசித்து வந்தார் .இவர் ஊர் ஊராக வெள்ளைப்பூண்டு வியாபாரம் செய்து வருவார். இந் நிலையில் இன்று (ஏப்.8) மதியம் வியாபாரத்திற்காக திருமங்கலம் மார்க்கெட்டிலிருந்த சரக்குகள் வாங்கிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது திருமங்கலம் உசிலம்பட்டி சாலையில் கண்டுகுளம் அருகே எதிரே உசிலம்பட்டியில் இருந்து சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த மினி வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நேரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.