கம்பத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்ற முதியவர் கைது

கைது;

Update: 2025-04-08 12:29 GMT
கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கம்பம்மெட்டு சாலை அருகே அரசன் (71) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதில் அவரிடமிருந்த 48 லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் அரசன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Similar News