சின்னமனூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் படுகாயம்

வழக்குப்பதிவு;

Update: 2025-04-08 12:30 GMT
தேவாரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மனைவி செல்வீஸ்வரியுடன் நேற்று முன்தினம் மார்க்கையன்கோட்டை சாலையில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் சென்றதில் நிலை தடுமாறி தம்பதியர் இருவரும் கீழே விழுந்தனர். இதில் செல்வீஸ்வரி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News