காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்

காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம்;

Update: 2025-04-08 12:32 GMT
காட்டுப்பள்ளி கடல் நீர் குடிநீராக்கும் ஆலையில் தொழிலாளர்கள் போராட்டம் வட சென்னைக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் பொதுமக்கள் குடிநீர் வினியோகம் இன்றி பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடல் நீர் குடிநீர் ஆலையை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் ஊதியம் வழங்க வேண்டும் என கோரி தொழிலாளர்கள் போராட்டம். திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் அமைந்த சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான கடல் நீரை குடிநீராக்கும் ஆலை கடந்த 2010 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பராமரிப்புபணிகளை செய்வதில் உயரதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் உற்ப்பத்திபாதிக்கப்பட்டது. நான்கு மாதங்கள் சம்பளம் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் தொடர் போராட்டம் அறிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இங்கு கடல் நீரை சுத்திகரித்து உற்பத்தி செய்யப்படும் குடிநீரானது எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் மணலி உள்ளிட்ட வடசென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நாள்தோறும் 100 எம் எல் டி குடிநீர் வழங்கி வந்த நிலையில் ஆலையில் உதிரி பாகங்களை கொள்முதல் செய்து முறையாக பராமரிக்க தவறியதால் தற்போது உற்பத்தி பாதிக்கப்பட்டு கடல் குடிநீர் ஆலைபணிகள் முடங்கி உள்ளது இதனால் அங்கு பணியாற்றிடும் ஊழியர்களுக்கும் சம்பளம் கிடைக்கவில்லை இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அங்கு பணியாற்றிடம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மாதவரம் மணலி உள்ளிட வட சென்னை பகுதிகளில் இதனால் குடிநீர் வினியோகம் 4மாதங்களாக முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக புழல் ஏரியிலிருந்து சுத்திகரித்து தண்ணீரை இப்பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது கோடை காலத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால் உரிய முறையில் காட்டுபள்ளி கடல் குடிநீர் ஆலைக்கு தேவையான உபகரணங்களை வாங்கி பராமரித்து மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Similar News