அச்சன்கோவில் அரசன் சுவாமி ஐயப்பன் திருக்கோயிலில் ஆபரணங்களுக்கு வரவேற்பு
அச்சன்கோவில் அரசன் சுவாமி ஐயப்பன் திருக்கோயிலில் ஆபரணங்களுக்கு வரவேற்பு;
செங்கோட்டை அருகே தமிழ்நாடு - கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் அரசன் சுவாமி ஐயப்பன் திருக்கோயிலில் நாளை 17-12-2025 முதல் வரும் 26-12-2025 வரை 10 நாட்கள் மண்டல மகோற்சவ திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது. இதற்காக சுவாமிக்கு தங்க ஆபரணங்கள், வாள் போன்றவை அணிவிப்பதற்காக புனலூர் கிருஷ்ணன் திருக்கோயிலில் இருந்து ஆபரணப் பெட்டி ஊர்வலமாக அச்சன்கோவில் கொண்டு செல்லும் வழியில், செங்கோட்டை பேருந்து நிலையம் முன்பு உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோயிலில் வைத்து செங்கோட்டை உல்லாச ஊர்தி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.